மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது!

26 தை 2024 வெள்ளி 07:19 | பார்வைகள் : 5824
கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார் என்பதும் சென்னை வந்தபோது கூட அவர் விஜயகாந்த் குறித்து பெருமையாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜயகாந்தின் கலையுலக சேவையை பாராட்டிய அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகை வைஜெயந்திமாலா அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கும் அவரது கலைச்சேவைக்காக பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025