ஜனநாயகத்தின் தாய் இந்தியா : ஜனாதிபதி குடியரசு தின உரை
26 தை 2024 வெள்ளி 04:49 | பார்வைகள் : 8409
ஜனநாயகத்தின் தாய் இந்தியா என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
நாளை (ஜன.26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
நாட்டு மக்கள் அனைவருக்கும் ‛குடியரசு தின வாழ்த்துக்கள். நாளை நம் நாட்டின் அரசியலமைப்பு துவக்கத்தை கொண்டாடும் பொன்னான நாள். நாம் இந்திய மக்கள் ' என்ற வார்த்தையுடன் துவங்குகிறது. இந்தியாவில், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது. அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டை 'ஜனநாயகத்தின் தாய்" என்று அழைக்கிறோம்.
அயோத்தியில் புகழ்பெற்ற புதிய கோவிலில் ராமர் சிலையின் வரலாற்று சிறப்புமிக்க 'பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை நாம் கண்டு கழித்தோம்.. ராமர் கோயில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல. நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கும் சான்று.
நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் , அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கும் இன்று நாம் மரியாதை செலுத்துவோம். நமது இலக்குகளை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan