இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்..

25 தை 2024 வியாழன் 16:44 | பார்வைகள் : 7153
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலன் இன்றி இன்று மாலை உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இசைஞானி இளையராஜா வரும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடத்த இலங்கைக்கு சென்று இருந்த நிலையில் தற்போது அவர் இலங்கையில் தான் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பல பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமின்றி சிற்பி, தேவா போன்ற இசையமைப்பாளர்கள் கம்போசிங் செய்த பாடல்களையும் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சில படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’மாய நதி’ என்ற திரைப்படத்திற்கு கூட அவர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2001 ஆம் ஆண்டு ’பாரதி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானதையடுத்து இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1