இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் மரணம்

25 தை 2024 வியாழன் 15:53 | பார்வைகள் : 12196
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.