வேலை தேடி வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு கட்டுப்பாடுகள்!
28 ஆடி 2023 வெள்ளி 11:31 | பார்வைகள் : 9837
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்ல விரும்பும், பிள்ளைகள் உள்ள குடும்பப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் உள்ளோர், அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர்கள், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் வழங்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிள்ளைகள் இல்லாமல் வேலைக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் பெண்கள், தங்களுக்கு பிள்ளைகள் இல்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan