தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்
24 தை 2024 புதன் 13:16 | பார்வைகள் : 9633
தற்போது தென்கொரிய இராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளமை அந்த பிராந்தியத்தில் மற்றுமொரு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய இராணுவத்தை நோக்கி வடகொரியா இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும்
வடகொரிய இராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்


















Bons Plans
Annuaire
Scan