Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா

24 தை 2024 புதன் 11:13 | பார்வைகள் : 6194


ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்றைய தினம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 

குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யா உக்ரைனின் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்