மீண்டும் அதே கூட்டணியில் 'அயலான் 2'

23 தை 2024 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 3617
'அயலான்2’ திரைப்படம் குறித்தான முக்கிய அப்டேட்டைப் படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தை‘இன்று நேற்று நாளை’ படப்புகழ் ரவிக்குமார் இயக்கி இருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் விஎஃப்எக்ஸ் பணிகள் காரணமாக இத்தனை வருடம் தள்ளிப் போனது. அதற்கேற்றாற் போலவே, படத்தில் அமைந்துள்ள விஎஃப்எக்ஸ் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘அயலான்2’ குறித்தான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அயலான்’ முதல் பாகத்திற்கு விஎஃப்எக்ஸ் செய்த பேன்தம் எஃப்எக்ஸ் குழுதான் ‘அயலான்2’ படத்திற்கும் வேலை செய்கிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைப் படி, ‘அயலான்2’ படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025