'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!
23 தை 2024 செவ்வாய் 14:58 | பார்வைகள் : 5643
சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த பிரம்மாண்டமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் சூர்யா 10 கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் படங்களில் இதுவரை இல்லாத அளவில் ஓபனிங் பாடல் இந்த படத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாடலுக்கு 100 டான்ஸர்கள் நடனமாடி உள்ளதாகவும் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட குளோனிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலுக்கு பிரேம் ரக்சித் என்பவர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்றும் இவர் தான் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் சூர்யா ரசிகர்களுக்கு வேற லெவல் விருந்தாக இருக்கும் என்றும் தமிழில் வெளியான மிகச் சிறந்த ஓப்பனிங் பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan