Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விலகல்

23 தை 2024 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 6048


இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

விராட் கோலி, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் திகதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, ''நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. 

சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.


விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.       

வர்த்தக‌ விளம்பரங்கள்