வடிவேலு - பகத் பாசில் இணையும் மாரீசன்
22 தை 2024 திங்கள் 13:28 | பார்வைகள் : 5792
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம் சாலையில் பயணம் செய்யும் ஒரு காமெடி படம் என்றும் ஒரு இளைஞர் மற்றும் நடுத்தர வயதை சேர்ந்த இருவர் நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மாரீசன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது. செம்மயாக இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan