அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை
22 தை 2024 திங்கள் 13:20 | பார்வைகள் : 6291
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார் அஜித்குமார். அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படும் நிலையில், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63 வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். இவர் இதற்கு முன்பு, திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியவர்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 63 வது படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2000ம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித்தும் - தபுவும் இணைந்து நடித்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையப்போகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan