Paristamil Navigation Paristamil advert login

கும்பாபிஷேக நிகழ்வு : அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள்

கும்பாபிஷேக நிகழ்வு : அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள்

22 தை 2024 திங்கள் 11:44 | பார்வைகள் : 5675


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானத்திற்கு அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள் வெளியாகியுள்ளது. 

அயோத்தியில் இன்று (ஜன.,22)ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் போலீசார் தடை விதித்ததாக பா.ஜ.வினர் குற்றம் சாட்டினர்.

தமிழக அரசு ஹிந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். இதற்கு உண்மைக்கு புறம்பான செய்தி என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகம் முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும்; கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதி கோரி ஹிந்து அமைப்புகள் கொடுத்த கடிதங்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி போலீசார் அனுமதி மறுத்து பிறப்பித்துள்ள ஆணைகள் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்