சுவிட்சர்லாந்தில் உணவு வங்கிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்

22 தை 2024 திங்கள் 10:17 | பார்வைகள் : 9837
சுவிட்சர்லாந்தில், கொவிட் காலகட்டத்தில், இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உலக முழுவதிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஏராளமானோர் உணவு வங்கிகளை நாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவருவதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உணவு வங்கிகள் முன் எப்போதுமே கூட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ள Caritas என்னும் தொண்டு நிறுவனம், கடந்த ஆண்டில் உணவு வங்கிகளை நாடுவோரின் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.
இன்னொரு ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், பணக்கார நகரமான ஜெனீவாவில் அதிக அளவில் மக்கள் உணவு வங்கிகளை பயன்படுத்தியுள்ளார்கள்.
Fondation Partage என்னும் தொண்டு நிறுவனத்தின் தலைவரான Marc Nobs கூறும்போது, மாதக் கடைசியில் உணவு வாங்க பணமில்லாததால் ணவு வங்கிகளை நாடும் மக்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்.
விலைவாசிப் பிரச்சினை, பணவீக்கம், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு, அதிக மின்கட்டணம் முதலான விடயங்களால், முழு நேரப் பணிகளில் உள்ளவர்களே செலவுகளை சமாளிக்கத் திணறுகிறார்கள் என்றால், வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1