Paristamil Navigation Paristamil advert login

விஜய் வாங்கிய சொகுசு கார் -விலை இத்தனை கோடியா?

விஜய் வாங்கிய சொகுசு கார் -விலை இத்தனை கோடியா?

22 தை 2024 திங்கள் 08:26 | பார்வைகள் : 6127


தளபதி விஜய் ஏற்கனவே சில விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிய மாடல் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி இருப்பதாகவும் இந்த காரின் மதிப்பு 2 கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர் எஸ், ஆடி ஏ8 உட்பட சில வெளிநாட்டு கார்கள் வைத்திருக்கிறார். கார்கள் வாங்குவதில் அலாதி பிரியம் உடைய விஜய் தற்போது புதிய BMW i7 xDrive 60 என்ற எலெக்ட்ரிக் காரை வாங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த காரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் விஜய் வாங்கிய முதல் எலக்ட்ரிக் கார் மாடல் இதுதான் என்பதும் இந்த காரை தான் இனி அவர் அதிகம் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தளபதி விஜய் அரசியலில் விரைவில் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணங்களுக்கு அவர் இந்த காரை பயன்படுத்திவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார்கள் வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது விஜய்யும் இணைந்து இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழுமையாக அரசியலில் இறங்குவார் என்றும் இரண்டு ஆண்டுகள் அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் விஜய் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்