யாழில் இளைஞனின் உயிரை பறித்த போதை பொருள்

21 தை 2024 ஞாயிறு 10:41 | பார்வைகள் : 6262
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர், அவர் நீர்வேலியில் உள்ள உறவினரது வீட்டில் 19ஆம் திகதி தங்கிவிட்டு, நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார்.
அதனையடுத்து, நேற்றிரவு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
பிறகு, அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பின்னரே இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவர் அதிகளவில் ஹெரோயின் பாவித்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர் மரணம் தொடர்பில் உண்மைகளை கண்டறிய உடற்கூற்று பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025