Paristamil Navigation Paristamil advert login

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

மக்கள் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

21 தை 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 9268


இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தாக்குதல் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் 24,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

மக்கள் குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.

  இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலில் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சிரியாவின் மனித உரிமை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்