விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம்?
20 தை 2024 சனி 14:52 | பார்வைகள் : 10799
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இதனிடையே, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும், இதுகுறித்து இருவரின் தரப்பிலும் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான கருத்தொன்றை குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேர்காணலில் விஜய் தேவரகொண்டா "எனக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan