சூரியின் அடுத்த திரைப்படத்திற்கான பெயர் வெளியானது !
20 தை 2024 சனி 09:55 | பார்வைகள் : 6189
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்போது வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.அண்மையில் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை திரைப்படம் அவரது நடிப்பில் வெளியாகியிருந்ததுடன் பலரும் அவரது நடிப்பினை பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சூரி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் பெயரினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளதுடன் இத்திரைப்படத்திற்கு 'கருடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இவர்களுடன் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளதுடன் இந்த திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் மற்றும் Title Glimpse வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan