தென்னாப்பிரிக்க நாடொன்றில் கோர விபத்து!
27 ஆடி 2023 வியாழன் 06:19 | பார்வைகள் : 18248
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கல்லூரி பஸ் பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan