Paristamil Navigation Paristamil advert login

மன்னார் - யாழ் வீதியில் விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்

மன்னார் - யாழ் வீதியில் விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்

20 தை 2024 சனி 02:36 | பார்வைகள் : 4280


மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சைக்கிளில் பயணித்த இருவரின் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த மற்றைய நபர் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச்சேர்ந்த 45 வயதுடைய மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், விபத்து தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்