விஜே பிரியங்கா கணவரைப் பிரிந்தாரா?

19 தை 2024 வெள்ளி 11:32 | பார்வைகள் : 6691
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரக்கூடியவர் விஜே பிரியங்கா. இவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் போட்டியாளராகப் பங்கேற்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இவருக்கும் விஜய் டிவியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது. தனது பர்சனல் வாழ்க்கைப் பற்றி பொதுவெளியில் பெரிதாக பேசாமல் இருந்த பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியிலாவது தனது கணவர் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் அதைப் பற்றிப் பேசவில்லை. இதனால், அவர் கணவரை அவர் பிரிந்து விட்டார் என்ற செய்தி உறுதியாகி விட்டது எனப் பலரும் தெரிவித்து வந்தனர். இப்படியான சூழலில்தான் சமீபத்தியப் பேட்டி ஒன்றில், பிரியங்காவின் வாழ்க்கைக் குறித்து அவரது அம்மா பேசியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “முதலில் இருந்த வாழ்க்கையில் தவறு நடந்துவிட்டது. இனிமேல் அமையும் வாழ்க்கையிலாவது எந்த தவறும் நடக்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டும். இதற்கு நீ சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என அவரது அம்மா அந்தப் பேட்டியிலேயே பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார்.
அவரும் அவரது அம்மாவிற்கு கலங்கிய கண்களுடன் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இதனால், அவர் கணவரைப் பிரிந்திருப்பது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1