Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உள்துறை அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு! - நீதிமன்ற தள்ளுபடியை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு!!

உள்துறை அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு! - நீதிமன்ற தள்ளுபடியை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு!!

19 தை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 20600


உள்துறை அமைச்சர் Gérald Darmanin மீது தெரிவிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டினை பரிஸ் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய உள்துறை அமைச்சராக உள்ள Gérald Darmanin மீது, கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு ஒன்று தெரிவிக்கபப்ட்டது. Sophie Spatz-Patterson எனும் பெண் இந்த குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு குறித்த பெண்ணை Gérald Darmanin பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை கடந்த சென்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் துளிர்விட்டுள்ளது. குறித்த Sophie Spatz-Patterson எனும் பெண் மீண்டும் தற்போது தள்ளுபடியை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

Sophie Spatz-Patterson மற்றும் Gérald Darmanin இருவரும் 2009 ஆம் ஆண்டில் உறவில் இருந்துள்ளனர். ஆனால் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்