இலங்கை உணவுகளில் ஏற்பட்ட மாற்றம்: குற்றம் சுமத்தும் வாடிக்கையாளர்கள்
18 தை 2024 வியாழன் 15:35 | பார்வைகள் : 7898
கரட் விலை உச்சம் தொட்டுள்ளதால் ஹோட்டல்களில் கரட் சேர்க்கப்படாமல் கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் என்பன தயாரிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அண்மைய நாட்களாக நாட்டில் மரக்கறிகளின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மரகறி வகைகளை கொள்வனவு செய்வதை குறைத்துள்ளனர்.
சந்தை நிலைவரப்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 1200 ரூபாவரையும் சில்லறை விலை 1 ஆயிரத்து 500 ரூபாவரையும் செல்கிறது.
கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கரட் மற்றும் வெங்காய இலைகளின் அளவை ஹோட்டல் உரிமையாளர்கள் குறைத்துள்ளனர். அத்துடன், சில ஹோட்டல்களில் கரட் சேர்க்காமல் இவை தயாரிக்கப்படுகின்றன.
அதேபோன்று கொத்து ரொட்டி மற்றும் ரைஸ் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan