அவுஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலங்கள்

26 ஆடி 2023 புதன் 10:05 | பார்வைகள் : 14975
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை மாலை காணப்பட்டது.
இதனையடுத்து மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இத்திமிங்கிலங்களை காப்பாற்றுவற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
மேலும் எஞ்சியுள்ள 46 திமிங்கிலங்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைக்ள தற்போது முன்னெடுக்கப்படு வருகின்றது.
அவற்றை கடலின் ஆழான பகுதிக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025