யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ இவரா ?
17 தை 2024 புதன் 15:21 | பார்வைகள் : 5813
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.
இவர், 132 ஐபில் போட்டிகளில் விளையாடி 750 ரன்களும் குவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். வெளி நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் வேலைகள் நடந்து வருகிறது.எனவே இதுகுறித்து, யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இப்படத்தில், யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ''சமீபத்தில் அனிமல் திரைபடம் பார்த்தேன். இப்படத்தில் நடித்த ரன்பீர் கபூரின் நடிப்பை கண்டபின், எனது வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்தால் திரையில் என்னை வெளிப்படுத்த அவர்தான் பொருத்தமாக இருப்பார்..ஆனால், இயக்குனரின் முடிவை பொருத்து அது உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan