Paristamil Navigation Paristamil advert login

கார்த்தி 27 படத்தின் தலைப்பு இதுவா?

கார்த்தி 27 படத்தின் தலைப்பு இதுவா?

17 தை 2024 புதன் 13:12 | பார்வைகள் : 6101


நடிகர் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் அரவிந்த்சாமி மாஸ் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’மெய்யழகன்’ என்று முடிவு செய்திருப்பதாகவும் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் உட்பட மேலும் சில முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ இரண்டாம் பாகத்தில் கார்த்தி நடிக்க வருகிறார் என்பதும் அதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்