மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா AI தொழில்நுட்பம்?
.jpg)
14 ஆடி 2023 வெள்ளி 07:45 | பார்வைகள் : 6594
AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக அன்றாட பயன்பாடுகளில் புகுந்து வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனும் தொழில்நுட்பம் தற்போதைய சூழலில் பல துறைகளில் வேகமாக ஊடுருவி வருகிறது.
கடந்த 1997ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் AI இயந்திரமான Deep Blue சதுரங்க விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டது. உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்ப்ரோவை தோற்கடித்தது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அதே போல் கணினியில் பயன்படுத்தப்படும் MS Word உள்ளிட்ட கோப்புகளில் உள்ள உச்சரிப்பு பிழைகாட்டி, மனிதர்களின் மொழித்திறன் இயந்திரத்தின் துணையுடன் மேம்படுத்துவதற்கான எளிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் 'Google Map' சாரதிகளின் வழி கண்டறியும் திறனை இயந்திரத்தின் துணையுடன் மேம்படுத்துவதாகும்.
ChatGPT தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. உதாரணமாக மின்னஞ்சல்கள், கடிதங்கள், அறிக்கைகள் உள்ளிட்டவற்றை எழுதுவதற்கும் பெரிய உரைகளை சுருக்குவதற்கு ChatGPTயை பயன்படுத்தலாம்.
ChatGPTயின் வருகை AI-யை பயன்படுத்திக் கல்விப்புலம் சார்ந்த கட்டுரைகள் அல்லது செய்திக் கட்டுரைகள் எழுதுவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கடந்த மே மாதம், நீதிமன்றத்தில் தனது வாதங்களுக்கு வலுசேர்ப்பதற்காக, ChatGPTயினால் திரட்டப்பட்ட தகவல்களை பெற்றுள்ளார்.
அவற்றின் அடிப்படையில் போலியான வழக்குகளை முன்னிறுத்தி அவர் வாதிட்டதால் பின்னர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என OpenAI, Google Deepmindயின் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர்.
AIயின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
திரைப்படங்களில் காண்பிப்பது போல், மனிதர்கள் பெரும்பாலும் AI தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
1960களிலேயே செயற்கை நுண்ணறிவு அறிவுள்ள இயந்திரங்கள் குறித்த சிந்தனை அறிமுகமானது. ஆனால் அவற்றின் அறிவை எப்படி நிரூபிப்பது என்பது தான் அறிவியலாளர்கள் எதிர்கொண்ட சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1