Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தை போல் உயரும் கரட்டின் விலை!

இலங்கையில் தங்கத்தை போல் உயரும் கரட்டின் விலை!

17 தை 2024 புதன் 12:00 | பார்வைகள் : 12892


வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை நேற்று (16) 2,000 ரூபாயாக பதிவாகியிருந்தது.

இந்தநிலையில், பெரும்பாலான வர்த்தக சந்தைகளில் இன்று (17) ஒரு கிலோகிராம் கெரட் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் ஒப்பிடுகையில், நாடு முழுவதிலும் உள்ள சில்லறை சந்தைகளில் ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், நுகேகொடை பொதுச் சந்தையில் இன்று காலை ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 2,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு மெனிங் சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 2,000 முதல் 2,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்