Paristamil Navigation Paristamil advert login

சாதனை படைக்கும் வரி வசூல்: பிரதமர் மோடி

சாதனை படைக்கும் வரி வசூல்: பிரதமர் மோடி

16 தை 2024 செவ்வாய் 14:50 | பார்வைகள் : 5974


மத்திய அரசின் சீர்திருத்தங்களினால், நாட்டில் வரி வசூல் சாதனை படைக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியை திறந்து வைத்தார்.

இதன் பிறகு மோடி பேசியதாவது: வாழ்க்கையில், ஆட்சி மற்றும் நல்லாட்சிக்கு அடையாளமாக கடவுள் ராமர் இருக்கிறார். 

கடந்த 10 ஆண்டுகளில் வரி அமைப்பில் ஏராளமான சீர்திருத்தம் கொண்டு வந்தோம். முன்பு இருந்த வரி அமைப்பு சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. போதிய வழிகாட்டுதல் இல்லாததால், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டனர். 

ஜிஎஸ்டி வடிவில், நவீன வரி அமைப்பை கொண்டு வந்தோம். வருமான வரி அமைப்பையும் அரசு சீர்படுத்தியது. இது போன்ற சீர்திருத்தங்களினால், நாட்டில் வரி வசூல் சாதனை படைக்கிறது. அரசு தொடர்ந்து போதுமான வருவாய் பெறுவதில் மக்களுக்கு பங்குள்ளது. 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்