அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கினாரா ?
 
                    16 தை 2024 செவ்வாய் 14:05 | பார்வைகள் : 9902
'பணம் கொடுத்து டைட்டில் பட்டத்தை நீங்கள் பெறலாம், ஆனால் என்னை போல் மக்களின் அன்பை பணம் கொடுத்து வாங்க முடியாது’ என்று மாயா தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் பட்டம் அர்ச்சனாவுக்கு தான் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது. மாயாவும் இதை பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அர்ச்சனாவிடம் கூறியிருக்கிறார். இருப்பினும் அவரது மனதில் ஒரு ஓரத்தில் நமக்கு டைட்டில் பட்டம் கிடைக்கலாம் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவருக்கு மூன்றாவது இடமே கிடைத்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மாயா வெளியேற்றப்படும் அறிவிப்பு வெளியான போது பூர்ணிமா உள்பட அவரது குழுவினர்கள் அவருக்கு கரகோஷம் கொடுத்தனர். அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மாயா ’பணம் கொடுத்து நீங்கள் டைட்டில் பட்டத்தை வெல்லலாம், ஆனால் மக்களின் அன்பை வெல்ல முடியாது, அது எனக்கு கிடைத்துவிட்டது’ என்ற பதிவு செய்துள்ளார்
உண்மையில் மக்களின் அன்பை பெற்றது யார்? மக்களின் எதிர்ப்பை பெற்றது யார்? என்பது அனைவருக்கும் தெரியும். மாயா தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மக்களின் அன்பை பெற்றதோடு டைட்டிலையும் அர்ச்சனா தான் பெற்றுள்ளார், மாயாவுக்கு வெளியே வந்த பின்பும் வன்மம் குறையவில்லை என்றும் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan