Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கரட் விலை உச்சம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கரட் விலை உச்சம்

16 தை 2024 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 5556


வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக  பாவனையாளர்கள் தெரிவித்தனர்.

மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம், நுவரெலியா தம்புள்ளை பொதுச் சந்தைக்கு வந்த பெருந்தொகையான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளனர்.

ஏனைய நாட்களில் அநுராதபுரம், நுவரெலியா, தம்புள்ளை பொதுச் சந்தைக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றைய தினங்களில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தைக்கு வருவதில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கரட் மொத்த விலை 1500.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1700.00 ரூபாவாகவும்   மேற்கொள்ளப்பட்ட வினவுதலில் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்தார்.

ஒரு கிலோ கிராம் போஞ்சி மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும் சில்லறை விலை 1,400.00 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 1,000.00 ரூபாவாகவும், சில்லறை விலை  1,300.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர் .

வர்த்தக‌ விளம்பரங்கள்