Paristamil Navigation Paristamil advert login

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட அதிசொகுசு ரயில் சேவை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட அதிசொகுசு ரயில் சேவை

26 ஆடி 2023 புதன் 03:15 | பார்வைகள் : 8704


அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு, வார இறுதியில் அதிசொகுசு ரயில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்கிஸையில் இருந்து, காங்கேசன்துறைக்கும், காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸைக்கும், இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் ரயில் முதலாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 4,000 ரூபாவாகவும், இரண்டாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 3,000 ரூபாவாகவும், மூன்றாம் வகுப்பு ஆசனக் கட்டணம் 2,000 ரூபாவாகவும் அறவிடப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்