Val-de-Marne : கவச வாகனம் ஆயுத முனையில் கொள்ளை முயற்சி!!
15 தை 2024 திங்கள் 19:21 | பார்வைகள் : 12128
Val-de-Marne மாவட்டத்தில் வங்கியின் முன்பாக நின்றிருந்த பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்றை ஆயுதமுனையில் கொள்ளையிடும் முயற்சி ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இன்று ஜனவரி 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. Avenue Maurice-Thorez வீதியில் உள்ள BCP வங்கியின் முன்பாக நின்றிருந்த கவச வாகனம் ஒன்றை, ஆயுததாரிகள் சிலர் காலை 6 மணி அளவில் சுற்றிவளைத்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து, அவசர கால சமிக்ஞை ஒலி எழுப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan