இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்த மராபி மலை
15 தை 2024 திங்கள் 12:42 | பார்வைகள் : 10808
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை மீண்டும் வெடித்தது.
எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள 150 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நேற்று (14.01.2024) அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமத்ரா தீவின் மிகவும் ஆக்டிவான எரிமலை மட்டுமன்றி, இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் விழித்திருக்கும் 130 எரிமலைகளில் ஒன்று என்ற வகையிலும் மராபி கவனம் பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan