Paristamil Navigation Paristamil advert login

ஊடக சந்திப்பில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

ஊடக சந்திப்பில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

14 தை 2024 ஞாயிறு 18:08 | பார்வைகள் : 5961


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் செவ்வாய்க்கிழமை ஊடக சந்திப்பில் கலந்துகொள்கிறார். 

Élisabeth Borne பதவி விலகல், புதிய பிரதமர் அறிவிப்பு, அரசாங்க மறுசீரமைப்பு என கடந்த இரு வாரங்கள் மிகவும் பரபரப்பாக கழிந்த நிலையில், ஜனாதிபதியின் ஊடக சந்திப்பு மிகவும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தது. 

அடுத்த வாரத்தில் அவர் உரையாற்றுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஊடக சந்திப்பு வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 8.15 மணி அளவில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறும் என எலிசே மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்