பிள்ளைகள் வேண்டாம் என்று முடிவு செய்து உலகம் சுற்றும் ஆசிய தம்பதி... இதுவரை 102 நாடுகள்

14 தை 2024 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 4117
வங்கதேச நாட்டவரான தம்பதி ஒன்று திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததுடன், உலக நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி காண்பதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் குடியிருக்கும் 45 வயதான Shahariath Sarmin மற்றும் 47 வயதான Rezaul Bahar என்ற தம்பதியே பிள்ளைகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவர்கள்.
ஆனால் அந்த முடிவெடுத்ததில் அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 2005ல் சொந்த நகரமான டாக்காவில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள Essex பகுதிக்கு குடியேறியுள்ளனர்.
தொடர்ந்து 2008 முதல் தங்கள் விரும்பியது போன்று உலக நாடுகளை சுற்றிப்பார்க்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் பயணமாக பஹாமாஸ் சென்றுள்ளனர்.
இருவரும் முழுநேர வேலை செய்பவர்கள். Bahar பொறியாளராகவும் Sarmin வர்த்தக ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தங்களின் ஆண்டு விடுமுறை நாட்கள் அனைத்தையும் பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டுக்கு 6 முதல் 8 பயணங்கள் வரையில் திட்டமிடுகின்றனர். கடந்த 16 ஆண்டுகளில் உலக நாடுகளை சுற்றிப்பார்க்கும் பொருட்டு 500,000 அமெரிக்க டொலர் தொகையை செலவிட்டுள்ளதாக Bahar தெரிவித்துள்ளார்.
பயணங்களால் மனது லேசாகும் என்று குறிப்பிட்டுள்ள Sarmin, அலுவலக பணிகளை மேலும் உத்வேகத்துடன் செய்ய உந்துதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தமது கணவருடன் நாள் முழுவதும் செலவிட கிடைக்கும் வாய்ப்பு இதுவென்றும் Sarmin குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 102 நாடுகளில் சென்று வந்ததாக கூறும் இந்த தம்பதி, அதில் Antarctica, Alaska, Mongolia, Egypt, Iceland, Kenya, Morocco, Patagonia, Jordan, Chile மற்றும் Faroe தீவுகள் தங்களுக்கு பிடித்தமான இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் உலகின் பிரபலமான பெரும் நகரங்கள் தங்களின் விருப்பமான பட்டியலில் இல்லை என்றாலும், விதிவிலக்காக துபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள மக்களும், கட்டிடங்களும் கலாச்சாரமும் புத்துணர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் பல்கேரியா செல்ல திட்டமிட்டுள்ள இந்த தம்பதி, இதுவரை 7 கண்டங்களில் 102 நாடுகள் சுற்றிப்பார்த்துள்ளதாகவும், மொத்தமாக 195 நாடுகளும் சுற்றிப்பார்க்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025