பெரும் தொகைக்கு விற்பனையாகும் விஜயின் GOAT படம்... இத்தனை கோடியா?

13 தை 2024 சனி 13:19 | பார்வைகள் : 7896
நடிகர் விஜயின் ’GOAT’ படத்தின் பிசினஸ் பெரும் தொகைக்கு விற்பனையாக உள்ளது. இது குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் ’GOAT’ படம் உருவாகி வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், சிநேகா, லைலா என பலரும் சேர்ந்து நடிக்கின்றனர். விஜயின் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தில் இருந்த நடிகர்கள் இவருடன் மீண்டும் திரையில் ஒன்று சேர்வது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் விஜயின் இளவயதுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது.
அதன் படப்பிடிப்புதான் இப்போது நடந்து வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விஜயின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, ’GOAT’ படத்தின் ஓடிடி உரிமம் பெரும் தொகைக்கு செல்ல உள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 125 கோடிக்கு ’GOAT’ படத்தை வாங்க முன்வந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. இதுதவிர படத்தின் இந்தி உரிமமும் தனியாக விற்பனையாக இருக்கிறது. ’GOAT’ படம் விஜயின் கரியரிலேயே அதிக பிசினஸ் நடக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025