இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!
13 தை 2024 சனி 12:31 | பார்வைகள் : 9842
இசையமைப்பாளர் அனிருத், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் இசையமைத்துள்ள நிலையில் முதல் முதலாக அவருக்கு மலையாள திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் என்பதும், ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் ’தலைவர் 171’ கமல்ஹாசனின் ’இந்தியன் 2 ’அஜித்தின் ’விடாமுயற்சி’ போன்ற படங்களில் தற்போது அவர் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி படங்களிலும் இசையமைத்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் பிரித்திவிராஜ் குமாரன் நடிக்கும் ’டைசன்’ என்ற மலையாள படத்துக்கு இசையமைக்க உள்ளார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் என்ட்ரி ஆகிறார் என்பதும் கேரளா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவர் இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan