முல்லைத்தீவில் கால் இழந்த குடும்பப் பெண் மீது கொடூர தாக்குதல்
13 தை 2024 சனி 10:46 | பார்வைகள் : 7194
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் தனித்திருந்த குறித்த பெண் மீதே இனந்தெரியாத நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பெண் இறுதிப் போரில் காலொன்றை இழந்தவர் என்பதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


























Bons Plans
Annuaire
Scan