வெளிநாடு ஒன்றில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள்

13 தை 2024 சனி 10:40 | பார்வைகள் : 10156
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
பிரச்சினைகளை எதிர்நோக்கும் இலங்கையர்கள் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் 220 இலங்கை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு பணியாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி பிரிவு, ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து அந்நாட்டு தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிலாளர்களுக்கு திருப்பி அனுப்ப விமான டிக்கெட்டுகளை வழங்க முடியும் என்று ஜோர்டான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், இதில் திருப்தியடையாத இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி பிரிவு அதிகாரிகள், சமூக காப்புறுதி நிதியத்தின் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025