Paristamil Navigation Paristamil advert login

 நேபாளத்தில் கோர விபத்து... 12 பலி..

 நேபாளத்தில் கோர விபத்து... 12 பலி..

13 தை 2024 சனி 09:46 | பார்வைகள் : 7918


நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 

22 பேர் படுகாயம் அடைந்தனர். 

பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்