Paristamil Navigation Paristamil advert login

மணி - ரவீனா திடீர் பிரச்சனைக்கு காரணம் என்ன?

மணி - ரவீனா திடீர் பிரச்சனைக்கு  காரணம் என்ன?

12 தை 2024 வெள்ளி 15:15 | பார்வைகள் : 5756


சமீபத்தில் எவிக்சன் ஆன ரவீனா தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் மணி அவரை வெறுப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக என்னை வெறுக்கிறீர்கள் என்று ரவீனா கேட்டதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான், இனிமேல் ஒட்டவே மாட்டேன் என்று மணி கூறினார்.

வெளியே போய் நாம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று ரவீனா சமாதானப்படுத்திய போதும் மணி உடனே ரவீனாவை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். ரவீனா இதனால் சோகமாக இருக்கிறார்.

மணி - ரவீனா ரிலேஷன்ஷிப்பில் என்ன ஆனது? மணி திடீரென ரவீனாவை வெறுக்க என்ன காரணம் என்று புரியவில்லை. இன்றைய எபிசோடில் இது குறித்து தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்