Valenton : ஒன்பது வெட்டுக்காயங்களுடன் ஒருவர் - உயிருக்கு போராட்டம்!!

12 தை 2024 வெள்ளி 13:21 | பார்வைகள் : 8376
ஒன்பது தடவைகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசின் தென்கிழக்கு புறநகரான Valenton இல் இச்சம்பவம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். ஒன்பது வெட்டுக்காயங்கள் அவரது உடலில் இருந்ததாகவும், அவர் Henri Mondor மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான நபரின் முன்னாள் காதலியின் தற்போதைய காதலனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
தாக்குதல் மேற்கொண்டவர் மறுநாள், நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025