இலங்கையில் 25,000 பேர் TIN இலக்கத்திற்காக பதிவு

12 தை 2024 வெள்ளி 12:44 | பார்வைகள் : 8630
இலங்கையில் நாளாந்தம் சுமார் 25,000 பேர் TIN இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தனா தெரிவித்துள்ளார்.
TIN இலக்கத்தை கட்டாயமாக்குவதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக் காரணமாக கட்டாய TIN இலக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு மேலும் மூன்று மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தை பெற்றுக் கொள்வது கட்டாயம் என நிதி அமைச்சு அறிவித்திருந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் TIN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.