Paristamil Navigation Paristamil advert login

செந்தில் பாலாஜி ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி

செந்தில் பாலாஜி ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி

12 தை 2024 வெள்ளி 11:48 | பார்வைகள் : 5898


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் 3வது முறையாக தள்ளுபடி செய்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு,  ஜாமின் கோரி 2 முறை அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

3வது முறையாக ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. இந்த மனு இன்று (ஜன.,12) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்