தனுஷ் மீண்டும் ஹாலிவுட் படத்தில் ?

12 தை 2024 வெள்ளி 11:11 | பார்வைகள் : 3530
நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்களைக் கடந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தி எக்ஸ்ட்ராடனரி பகிர், தி கிரே மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் நாளை ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் இதற்கான புரோமொஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் " தனுஷ் மீண்டும் ஒரு புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்" என கூறினார். இப்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.