டி20 போட்டியில் 100வது வெற்றி - உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா
 
                    12 தை 2024 வெள்ளி 10:16 | பார்வைகள் : 5284
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 100வது டி20 போட்டியின் வெற்றியை பதிவு செய்து தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை ரோகித் சர்மா 149 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
அதில் இந்திய அணி வெற்றி பெற்ற 100-போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கெடுத்துள்ளார்.
அவரை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 2வது இடத்தில் உள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan