பரிசின் வடக்கு புறநகரில் சோகம்! - 15 ஆவது தளத்தில் இருந்து விழுந்த சிறுமி பலி!!
12 தை 2024 வெள்ளி 07:32 | பார்வைகள் : 10503
பரிசின் வடக்கு புறநகரான Villeneuve-la-Garenne (Hauts-de-Seine) இல் வசிக்கும் சிறுமி ஒருவர் 15 ஆவது தளத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார்.
ஜனவரி 10 ஆம் திகதி, புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் துல்லியமான விபரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இதுவரை வெளியான செய்திகளின் படி, 10 வயதுடைய சிறுமி ஒருவர் அவர் வசிக்கும் 15 ஆவது தளத்தில் உள்ள வீட்டின் விழுந்துள்ளார். தவறுதலாக விழுந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கும் அனைவருக்கும் உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan