22ல் குற்றச்சாட்டு பதிவு: அமைச்சர் ஆஜராக வேண்டும்

12 தை 2024 வெள்ளி 03:30 | பார்வைகள் : 6803
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல், அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது.
அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த அவரை, நீதிபதி எஸ்.அல்லி முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின், 15வது முறையாக, வரும் 22ம் தேதி வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆவணங்களை வழங்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், மீண்டும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் ஆஜராகினர்.
இதையடுத்து நீதிபதி, 'ஆவணங்களை கோரிய மனுவுக்கு, வரும் 22ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்; அன்றைய தினம் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்; அப்போது அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது, இன்று முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025